கூகுளின் அடுத்த அப்டேட்!!QR மூலம் டிரான்ஸ்பர் ஆகும் பைல்கள்!!

தற்பொழுது நடைமுறையில் உள்ள Nearby Share ஆன Quick share அம்சம் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தக்கூடிய பயணர்களுக்கு ஏர் டிராப்ட் பைல்களை மட்டுமே ஷேர் செய்ய பயன்படுத்தப்படும் வகையில் அமைந்திருந்தது.

Quick share அம்சத்தின் மூலம் ஆஃப்லைனில் பெரிய அளவிலான வீடியோக்கள் முதல் நம்மால் பைல் ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ள முடியும் படி அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கியூ ஆர் கோர்ட் ஸ்கேன் செய்வதன் மூலம் பைல்களை ட்ரான்ஸ்லேட் செய்யும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Google நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சம் ஃபைல்களை பாதுகாப்பான முறையில் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு அனுமதிக்கிறது. மேலும் தங்களுடைய சாதனம் குறித்த தகவல்கள் வேறு ஒருவருக்கு தெரியப்படுத்தாமல் இருக்கவும் இந்த அம்சமானது பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு, நாம் இப்பொழுது மற்றவர்களுக்கு தெரியாமல் ஒருவருக்கு ஒரு பைலை ஷேர் செய்ய வேண்டுமென்றால், அந்த பைலுக்கு என ஒரு க்யூ ஆர் கோர்ட் நம்முடைய மொபைலால் உருவாக்கப்படும். அதனை நாம் ஷேர் செய்ய விரும்புபவர் ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த பைலினை பெற்றுக்கொள்வது எளிதான காரியம் ஆகும். இதன் மூலம் நாம் எந்த பைலை ஷேர் செய்கிறோம் என்பது இருவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

குறிப்பு :-

இந்த புதிய அம்சம் டிசம்பர் 2024 அப்டேட்டில் வெளியாகிறது. ஆனால், இப்போதைக்கு இது குறிப்பிட்ட சில சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். வரக்கூடிய வாரங்களில் இந்த அம்சம் பிக்சல் மாடல்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.