மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்த மாதம் நடந்தது. இதழ் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
நிர்மலா சீதாராமன் அவர்களிடம் விவசாய அமைப்பு விடுத்த கோரிக்கைகள் :-
✓ முதல் கோரிக்கையாக பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதியை இரட்டிப்பாக தர வேண்டுமென தெரிவித்துள்ளனர். அதாவது 6000 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
✓ சிறு மற்றும் குறு விவசாயிகளையும் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
✓ நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 6000 ரூபாய் ஆண்டு உதவி தொகையாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை அதிகரித்து தர வேண்டுமாறு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
மேலும் குறிப்பாக, காங்கிரஸ் எம்பி சரண்ஜித் சிங் தலைமையிலான வேளாண், கால்நடைத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ரூ.12,000 ஆக அதிகரிக்க மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்து இருக்கிறார்.