தொடர் விடுமுறையை ஒட்டி போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
83
Important announcement issued by the Transport Corporation in connection with the holiday!!
Important announcement issued by the Transport Corporation in connection with the holiday!!

பள்ளி அரையாண்டு தேர்வுகள் வருகிற டிசம்பர் 23ஆம் தேதி முடிய உள்ள நிலையில் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா செல்லக்கூடிய பயணிகளுக்காகவும், அதனை தொடர்ந்து வரக்கூடிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு :-

பள்ளி தேர்வு விடுமுறை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை போன்றவற்றிற்கும், வார விடுமுறை நாட்களான டிசம்பர் 20 (வெள்ளிக்கிழமை), டிசம்பர் 21 (சனிக்கிழமை) மற்றும் டிசம்பர் 22 (ஞாயிறு) போன்ற வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகளையும் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

கூடுதல் சிறப்பு பேருந்துகளின் விவரங்கள் :-

டிசம்பர் 20 அன்று சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 325 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், டிசம்பர் 21 அன்று 280 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு டிசம்பர் 20 மற்றும் டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் மொத்தம் 81 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பு :-

இதுவரையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 13,864 பயணிகளும் சனிக்கிழமை 11,642 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,063 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருக்கின்றனர்.

போக்குவரத்து கழகத்தின் வேண்டுகோள் :-

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

Previous articleபாஜக எம்.பி மண்டை உடைப்பு  விவகாரம்!! ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு!!
Next articleதொகுப்பாளினியிடம் புடவையை தூக்கி கட்டுமாறு கூறிய விடிவி கணேஷ்!! சங்கடத்தில் ஆழ்ந்த பெண்!!