நுரையீரல் சளி கரைந்து வர.. எலுமிச்சை சாறுடன் இந்த ஒரு திரவத்தை சேர்த்து குடிங்க!!

0
95
Lung mucus
Lung mucus

மழை,பனியால் சளி,இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.தீராத சளி தொல்லையால் மூச்சு விடுவதில் சிக்கல் உண்டாகிறது.உங்களுக்கு நுரையீரல் சளி பாதிப்பு இருந்தால் கீழே சொல்லப்பட்டுள்ள ரெமிடியை வைத்து குணப்படுத்திக் கொள்ளவும்.

தேவையான பொருட்கள்:

1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை தரையில் வைத்து உருட்டி தேய்க்கவும்.இவ்வாறு செய்தால் எலுமிச்சை சாறு பிழிய சுலபமாக இருக்கும்.

இப்பொழுது எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு இதில் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை நீரை ஊற்றி ஸ்பூன் கொண்டு கலந்து விடவும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான தேனை அதில் ஊற்றி கலந்து பருகினால் நுரையீரல் சளி குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)நாட்டு மஞ்சள் – சிட்டிகை அளவு
2)பசும் பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி நன்கு காய்ச்சவும்.பால் பச்சை வாசனை நீங்கியதும் சிட்டிகை அளவு நாட்டு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் நுரையீரலில் உள்ள கெட்டி சளி கரைந்து மலத்தில் வந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

1)காய்ச்சாத பால் – ஒரு கிளாஸ்
2)மிளகு – இரண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்து இரண்டு கரு மிளகை உரலில் போட்டு இடித்து பாலில் சேர்க்கவும்.

பால் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகவும்.இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி குணமாகும்.அதேபோல் சூடான நீரை பருகி வந்தால் நுரையீரல் சளி கரைந்துவிடும்

Previous articleகண் ஷார்ப்பாக தெரிய.. கண்ணாடியை கழட்டி வீச இந்த இலையை இவ்வாறு சாப்பிடுங்கள்!!
Next articleமார்கழி கோலம்: பச்சரிசி இருந்தால் 2 நிமிடத்தில் சூப்பரான கோலப்பொடி ரெடி!!