Cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓய்வு அறிவித்த நிலையில் தந்தை அளித்த பேட்டியின் மூலம் தந்தையை ஒருமையில் பேசியுள்ள அஸ்வின்.
இந்திய அணியின் மிக முக்கிய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நடுவே தனது ஓய்வு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் போட்டியின் மூன்றாவது போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியானது மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது.
இந்த போட்டி முடிந்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் கலந்து கொண்டனர். அப்போது அந்த செய்தியாளர் சந்திப்பில் அஸ்வின் அடி லைட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான் நான் விளையாடிய கடைசி போட்டி. நான் அனைத்து விதமான சர்வதேச போட்டிகள் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் என உருக்கமாக தனது ஓய்வை அறிவித்தார். இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓய்வு அறிவித்து பின் தமிழகம் திரும்பிய அஸ்வினை குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் வரவேர்த்தனர். இதன்பின் செய்தியாளரிடம் பேசிய அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் அவருக்கு போட்டியில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் அவர் மனவேதனையுடன் ஓய்வு அறிவித்துள்ளதாக பதில் அளித்தார் இந்த பதில் ஊடகங்களில் தீயாய் பரவியது.
இந்நிலையில் மன்னிப்பு கேட்டு அஸ்வின் பதிவு ஒன்றை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது என் அப்பா மீடியா பயிற்சி பெற்றவர் அல்ல, டேய் அப்பா என்னடா இது, அப்பாவின் கூற்றுகள் இந்த வளமான பாரம்பரியத்தை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என்று நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளார்.