Cricket : நீ மட்டும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் தொடரில் மீண்டும் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்குவாரா என்ற கேள்வி சமூக வலைத்தளம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும். எனவே இந்திய அணி 4 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற சூழலில் உள்ளது.
ஆனால் இந்திய அணி இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்தது. எனவே இந்தப் போட்டி தொடரில் இனிவரும் இரண்டு போட்டிகளில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரராக இந்த ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே எல் ராகுல் களமிறங்கினார். மேலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மூன்றாவது போட்டியில் முக்கிய வீரர்கள் அனைவரும் விட்டுட்டு இருந்தாலும் கே எல் ராகுல் விக்கெட் இழக்காமல் கடைசி வரை களத்தில் போராடினார். இரண்டாவது இன்னிங்ஸ் பொறுத்தவரை இந்திய அணி பேட்டிங் செய்யும்போது தொடக்க வீரராக ரோகித் சர்மா களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது போல் நடக்காமல் கே எல் ராகுலே தொடக்க வீரராக களம் இறங்கினார் இதனால் ரசிகர்கள் இனி வாய்ப்பே இல்லை இந்த தொடரில் கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.