ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது அதில் முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியானது சமனில் முடிவடைந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் நாலாவது போட்டியில் திரும்பி உள்ளது.
இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகளில் நான்கு போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் ஒரு போட்டி சமநிலையில் முடிந்ததால் அடுத்து வரும் இரு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எழுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இந்திய அணியில் சுப்மன் கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் நான்காவது போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவருக்கு பதிலாக துருவ் ஜுரல் இந்திய அணயின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.