நூதன முறையில் மின்சாரம் திருடிய எம்.பி!! அபராதம் மட்டும் 2 கோடி!!

0
98
MP who stole electricity in a sophisticated way!! 2 crore fine only!!
MP who stole electricity in a sophisticated way!! 2 crore fine only!!

உத்தரப்பிரதேசம்: சம்பல் தொகுதி எம்பி ஜியா உர் ரஹ்மான் ஆவர். அவர் அகிலேஷன் சமாஜ்வாடி  கட்சியின் சேர்ந்தவர் ஆவர். தீபசராய் பகுதியில் உள்ள இவரது வீட்டுக்கு இரண்டு தினங்களுக்கு முன் மின்வாரிய ஊழியர்கள் ரீடிங் எடுக்க சென்றனர்.  அவர் ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றுக்கான மின்சார பயன்பாடு மீட்டரில் பதிவாகாதபடி செய்து மின் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எம்.பி ஜியாவின் தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இதை பற்றி போலீசில் புகார் அளித்துள்ளனர் மிவ்றிய பணியாளர்கள்.  மின்சார திருட்டுகாக ஜியா உர் ரஹ்மான் மீது  மாநில மின்வாரியம் ஒரு கோடியே 91 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் அவரது வீட்டு மின் இணைப்பையும் துண்டித்தது. மின்வாரிய உதவி பொறியாளர் வினோத்குமார் கூறும் போது எம் பி ஜியாவின் வீட்டில் 4 கிலோ வாட் திறனுடைய மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த ஆறு மாதங்கள் பூஜ்யம் யூனிட் அளவீட்டை காட்டியது தெரிய வந்தது. ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி சோதனை செய்தபோது 16 கிலோவாட் திறன்  பயன்படுத்தியது தெரிந்தது.

இதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது அவர் கூறினார்.  இந்த குற்றச்சாட்டை மறுத்த எம்.பி-யின் வக்கீல் ஜமால், வீட்டில் 10 கிலோ வாட் சோலார் பேனல் உள்ளதாக கூறினார். அதைத்தான் வீட்டில் பயன்படுத்துகிறார்கள் அதனால் தான் பூஜ்யம் என காட்டியுள்ளது என தெரிவித்தார்.  ஆனால் சோலார் பேனல்கள் செயல்படவில்லை எனவும் மின் மீட்டர்கள் சீல் உடைக்கப்பட்ட மாற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

Previous articleகோடா நாடு கொலை வழக்கு!! எடப்பாடி பழனிசாமிக்கு ஜெக் வைத்த உயர்நீதிமன்றம் தப்பிப்பாரா?
Next article27 மாவட்டங்களுக்கு  உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? ரூட்டை மாற்றிய தமிழக அரசு!!