cinema: இனி வருடம் இரண்டு படங்கள் என கங்குவா படத்திற்கு பின் நடிகர் சூர்யா கூறியுல்லார்.
சூர்யாவின் கங்குவா படமானது மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வந்தது. ஆனால் இந்த படமானது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதையடுத்து தற்போது சூர்யா, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது படத்தை நடிக்க உள்ளார்.
இது ஓராண்டுகள் கழித்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்த ஆண்டு இறுதிக்குள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த வரும் சூர்யாவின் 44 ரிலீஸ் ஆகும் என கூறுகின்றனர். மேற்கொண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தில் கதாநாயகியாக திரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களின் காம்போவானது மௌனம் பேசியதே ஆறு உள்ளிட்ட பட வெற்றி படங்களை கொடுத்துள்ளது.
அந்தவகையில் கடந்து 20 ஆண்டுகள் கழித்து தான் இவர்களின் கூட்டணி மீண்டும் உறுதியாகியுள்ளது. இதனால் சூர்யா 45 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் கூடியுள்ளது என்றே கூறலாம். மேற்கொண்டு சூர்யா 45 பட தளத்தில் அளித்த பேட்டியில் இனி வரும் நாட்களில் ஆண்டுக்கு இரண்டு படம் வெளியாகும் என கூறியுள்ளார். இது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.