மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை, இந்தியாவிற்கு அல்ல!! சர்ச்சையை கிளப்பிய பாடகர்!!

0
231
Mahatma Gandhi is the Father of the Nation for Pakistan, not for India!! Controversial singer!!
Mahatma Gandhi is the Father of the Nation for Pakistan, not for India!! Controversial singer!!

டெல்லி: அபிஜித் பட்டாச்சாரியா 1990-களில் பாலிவுட்டின் முன்னனி பின்னணி பாடகராக புகழப்பட்டவர். மேலும் ஆவர் ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். இவரை பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் திரைத்துறையில் அறிமுகம் செய்தது வைத்துள்ளார். 90 காலகட்டங்களில் இவரின் இசையில் பின்னணி பாடகி ஆஷா போஸ்லோவுடன் இணைந்து பல டூயட் பாடல்கள் மெகா ஹிட்டானது.

இந்த நிலையில் புதுடில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ”மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை, இந்தியாவிற்கு அல்ல. பாக்., நாடு இருப்பதற்கு காந்திதான் காரணம்”  என மகாத்மா காந்தி பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பரபரப்பாக்கியுள்ளார்.

அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியது இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் மகாத்மா காந்தியை விடவும் மேலானவர். மகாத்மா காந்தியை எப்படி தேசத் தந்தை என்று அழைக்கிறோமோ, அதேபோல இசையுலக தேசத்தின் தந்தை ஆர்.டி.பர்மன். மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை, இந்தியாவிற்கு அல்ல. இந்தியா ஏற்கனவே இருந்தது, பின்னர் இந்தியாவிலிருந்து தான் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. காந்தி இந்தியாவின் தேசத் தந்தை என்று தவறாக அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் நாடு இருப்பதற்கு காரணமானவர் அவர்தான்” என்று பேசினார்.

Previous article4 வது போட்டியில் ரோகித் சர்மா இல்லை.. பயிற்சியில் ஏற்பட்ட திடீர் சம்பவம்!!
Next articleஉறுதியானது பும்ராவின் கேப்டன்ஷிப்.. காயத்தால் வெளியேறும் ரோகித் சர்மா!! நடந்தது என்ன??