இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டியில் முடிவடைந்துள்ளது இதில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வென்று மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ரசிகன் எதிர்பார்ப்பு நான்காவது போட்டியில் உச்சமடைந்துள்ளது.
இந்த நான்காவது போட்டியானது வருகிற 26ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு இரு அணிகளும் தீவிரமான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய பேட்டர்களான விராட் கோலி ரோகித் சர்மாவை தாண்டி கே எல் ராகுல் மீது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இதுவரை கே எல் ராகுல் இந்தத் தொடரில் ஆர் இன்னிங்ஸில் விளையாடி இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் அவரின் சராசரி 47 மேலும் இந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன் அடித்த வீரர் இவர்தான். இவர் மொத்தம் 235 ரன்கள் குவித்துள்ளார்.
இதற்கு முன் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது 2021 இல் 123 ரன்கள் அடித்து சதம் விளாசினார். தொடர்ந்து அடுத்து நடைபெற்ற 2023 அதே பாக்ஸிங் டே டெஸ்ட் மேட்சில் 101 ரன்கள் விளாசினார். இதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் மேட்சில் அனைவரின் கவனமும் கே எல் ராகுல். மீது உள்ளது.