Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள நான்காவது போட்டியில் கே எல் ராகுல் சதம் அடிப்பாரா??
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் நான்காவது போட்டியில் மோத உள்ளது இந்த போட்டிக்கான தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி இந்த தொடரில் மீதமுள்ள இரு போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும். எனும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. ஆனால் அடுத்த இரு போட்டிகளில் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்தது. இதனால் இந்திய அணி அடுத்து நடைபெற உள்ள இரு போட்டியில் வெற்றி பெற்று ஆக வேண்டும்.
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் கே எல் ராகுல் இந்த ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் முக்கிய விரல்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் இது போன்ற முக்கிய வீரர்கள் ஆட்டம் இழந்த நிலையில் இந்திய அணி திணறி வந்தது. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கி ஆரம்பத்தின் முதல் கே எல் ராகுல் நிதானமாக விளையாடி அணிக்கு ரன் சேர்த்தார்.
மேலும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே 2021 மற்றும் 2023 இல் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசினார். இதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி ஆசியா அணிக்கு எதிரான நான்காவது போட்டி பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது. இதனால் தொடர்ந்து இரு பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த கே எல் ராகுல் மூன்றாவது போட்டியிலும் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்புடன் இந்திய அணியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.