இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் நாதன் மேக்ஸ் வீனி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில். ஏற்கனவே இந்த தொடரில் மூன்று போட்டியில் நடந்து முடிந்தது. இந்தத் தொடரில் அறிமுகமான வீரர் தான் நாதன் மேக்ஸ்வினி. இவர் பொதுவாக போட்டிகளில் மூன்றாவது அல்லது நான்காவது வரிசையில் களமிறங்கி விளையாடி வந்தார். ஆனால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் தொடக்க வீரராக களம் இறங்கினார். இருப்பினும் இவர் குறைவான எண்களில் ஆட்டம் இழந்து வந்தார்.
இதனால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார் அவருக்கு பதிலாக 19 வயதான சாம் கோண்ஸ்டாஸ் என்ற இளம்வீரர் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்ட நாதன் மேக்ஸ் வீனி அங்கு நடைபெற்று வரும் பிக் பாஸ் லீக் தொடரில் இணைந்தார். அப்போது மூன்றாவது வரிசையில் களம் இறங்கி 49 பந்துகளில் 78 ரன்கள் அடித்து அணியின் வெற்றி பாதைக்கு முக்கிய தூணாக இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் இவரை வரிசை மாற்று இறக்கிதல் தான் இப்படி பதட்டத்தில் விளையாடி வருகிறார் இருப்பினும் வாய்ப்புகள் கிடைத்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.