இன்று ஆண்களிடையே விந்தணு குறைபாடு பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது.குறைவான விந்தணு வெளியேற்றம்,நீர்த்த மற்றும் தரமற்ற விந்து பிரச்சனையால் குழந்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
தற்பொழுது மக்கள் தொகை சரிவிற்கு முக்கிய காரணமாக இது முன்வைக்கப்படுகிறது.புகைப்பழக்கம்,மன அழுத்தம்,உணவுமுறை பழக்கத்தால் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது.
ஆண்கள் முதுமை காலத்தில் விந்தணு குறைபாட்டை சந்திப்பது இயல்பாக நடக்கக் கூடிய ஒரு விஷயம் தான்.ஆனால் இளம் வயதில் இந்த பிரச்சனையை சந்தித்தால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.விந்தணு குறைபாடு பிரச்சனை இருப்பவர்கள் தாமதம் செய்யாமல் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இந்த விந்தணு குறைபாட்டை சரி செய்ய ஆயுர்வேதத்தை நாடலாம்.ஆயுர்வேதத்தில் பிரம்மதண்டு விந்தணு தரத்தை மேம்படுத்தும் ஒரு மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.மஞ்சள் நிற பூக்களை கொண்டுள்ள இந்த மூலிகை இமயமலை பகுதியில் அதிகம் வளர்கிறது.
அதேபோல் வறண்ட நிலப் பகுதியில் இந்த தாவரம் செழிப்பாக வளர்கிறது.இந்த செடியில் உள்ள இலை,விதை,கிளை,வேர் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.இந்த பிரம்மதண்டு செடியின் வேரை சுத்தம் செய்து நன்றாக காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 10 கிராம் இந்த பொடி கலந்து பருகி வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
பிரம்மதண்டு இலையை அரைத்து சாறு எடுத்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து தொடர்ந்து 21 நாட்கள் பருகி வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.பிரம்மதண்டு விதையை அரைத்து எண்ணெய் எடுத்து ஆண்குறி மீது பூசி வந்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.இந்த தாவரத்தின் இலையை அரைத்து கொதிக்க வைத்து பருகி வந்தால் தோல் அரிப்பு குணமாகும்.