பல் கூச்சத்தால் பிடித்த உணவுகளை சாப்பிட முடியலையா? இந்த பேஸ்டை கொண்டு பல் துலக்குங்கள்!!

0
105
Can't eat favorite foods because of toothache? Brush your teeth with this paste!!
Can't eat favorite foods because of toothache? Brush your teeth with this paste!!

சூடான மற்றும் அதிக குளிர்ச்சி நிறைந்த உணவுகளை கண்டாலே சில பயப்படுகின்றனர்.இந்த உணவுகளை சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்பட்டு அவஸ்தையை சந்திக்க வேண்டுமென்று எண்ணி அதை தவிர்க்கின்றனர்.சிலருக்கு ஐஸ்க்ரீம்,கூல் ட்ரிங்க்ஸ் போன்றவை விருப்பமான பொருளாக இருக்கும்.ஆனால் பல் கூச்சல் அதை ருசிக்க முடியாமல் போகிறது.

பல் கூச்சத்தை கட்டுப்படுத்த விலை அதிகமான பேஸ்ட் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே பற்பொடி தயாரித்து பல் துலக்கி வந்தால் கூச்சம் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

*நிலவேம்பு – ஒரு கைப்பிடி
*மஞ்சள் கிழங்கு – ஒன்று
*வேப்பிலை – ஒரு கைப்பிடி
*இந்துப்பு – சிறிதளவு

செய்முறை:-

ஒரு கைப்பிடி நிலவேம்பு மற்றும் ஒரு கைப்பிடி வேப்பிலையை வெயிலில் நன்றாக உலர்த்தி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.இதேபோல் இந்துப்பையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது அரைத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்து டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.இந்த பற்பொடி பயன்படுத்தி பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் ஏற்படுவது குறையும்.

பல் கூச்சத்திற்கு மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
*இந்துப்பு – அரை தேக்கரண்டி
*கிராம்பு – ஐந்து

செய்முறை:-

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஐந்து கிராம்பு மற்றும் அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து குறைவான தீயில் வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் சிறிய வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடுபடுத்தவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள கிராம்பு இந்துப்பு பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து சிறிது நேரம் ஆறவிடவும்.பின்னர் இதை வைத்து பல் துலக்கினால் பல் கூச்ச பாதிப்பு குணமாகும்.அதேபோல் கருவேலம்பட்டையை பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் குறையும்.

Previous articleஅன்றாட வாழ்வில் அனைவருக்கும் பயன்படும் 12 பயனுள்ள இயற்கை வைத்திய குறிப்புகள்!!
Next articleஇன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!!RBI அறிவிப்பு!!