பெண்கள் வளைவான மற்றும் ஒல்லியான இடுப்பு இருக்க வேண்டுமென்று ஆசைக் கொள்கின்றனர்.ஆனால் மோசமான உணவுமுறை,சோம்பேறி வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இடுப்பு பகுதியில் அதிகளவு கெட்ட கொழுப்பு சேர்ந்து ஆரோக்கியம் மற்றும் அழகை கெடுக்கிறது.எனவே இடுப்பு சதையை குறைக்க கீழ்கண்ட மூலிகை டீ செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)புரோக்கோலி – இரண்டு பீஸ்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு பீஸ் புரோக்கோலி எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.பிறகு புரோக்கோலி துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
தண்ணீர் நிறம் மாறி வரும் வரை கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வரவும்.
இந்த புரோக்கோலி டீ இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து பிட்டாக இருக்க உதவுகிறது.
எலுமிச்சை டீ
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகி வந்தால் இடுப்பு சதை குறைந்து ஒல்லியாக தெரிவீர்கள்.
சீரக டீ
தேவையான பொருட்கள்:
1)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
பாத்திரம் ஒன்றில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்.