*இருதய படபடப்பு நீங்க
அத்திப்பழத்தை உலர்த்தி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இருதய படபடப்பு நீங்கும்.பேரிக்காயை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் இருதய படபடப்பு நீங்கும்.
*மார்பு வலி
எலுமிச்சை சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கும்.துளசி விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.
*கல்லீரல் வீக்கம்
வெந்தயத்தை பொடித்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் வலி குணமாகும்.
*மூளை பலம் அதிகரிக்க
பீர்க்கங்காய் வேரை சுத்தம் செய்து கசாயம் செய்து பருகி வந்தால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.
*உடல் சோர்வு நீங்க
பெரிய நெல்லிக்காய் பொடி மற்றும் வாழைத்தண்டு பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் இருக்கலாம்.
*குமட்டல் மற்றும் வாந்தி
காம்பு நீக்கப்பட்ட வெற்றிலை மற்றும் இடித்த ஏலக்காயை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடித்து பருகினால் வாந்தி மற்றும் குமட்டல் நிற்கும்.
*தலைவலி
பசும் பாலில் ஒரு தேக்கரண்டி கடுகுத் தூள் சேர்த்து குழைத்து நெற்றி மீது பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
*இம்யூனிட்டி பவர் அதிகரிக்க
தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் தேநீர் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் பருகி வரலாம்.
*உடல் சூடு குறைய
அருகம்புல் பொடியை ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகி வந்தால் உடல் சூடு தணியும்.தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளித்தால் உடல் சூடு குறையும்.
*தோல் நோய்
வெள்ளை பூண்டை நசுக்கி தோலில் தடவி குளித்து வந்தால் சருமப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
*வயிறு பிரச்சனை
எலுமிச்சை சாறு மற்றும் உப்பை சூடான நீரில் கலந்து பருகினால் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
*இரத்த நச்சுக் கழிவுகள் நீங்க
இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் நீங்கும்.