சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த அறிக்கையில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் கோவை மெட்ரோ பணிகளின் விவரங்களை மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் அறிவித்தார். அதன்படி கோவை அமைய இருக்கும் மெட்ரோ வழித்தடங்கள் இருக்கும் நிலங்களை கையகபடுத்தபடுதல் மற்றும் அடுத்த 100 ஆண்டுகள் வரை பயன்படுத்தும் அளவிற்க்கு தரமான பணிகளை செய்து கொடுத்தல் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் இந்த மெட்ரோ பணிகள் முதல் கட்டமாக 34.8 கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்படும். இதில் 32 மெட்ரோ பயணிகள் நிறுத்தம் அமைக்கப்படும் என குறிப்பிட்டனர். மேலும் கோவை மற்றும் மதுரை ஆகிய இரு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த திட்டமாக மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசுத் திட்டமாக செயல்படுத்த வேண்டும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.10,740 கோடியும் மற்றும் மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.11,340 கோடியும் நடப்பு ஆண்டு விலைகளை கொண்டு மதிப்பிடபட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தை குறைந்தது 3 வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோவை மெட்ரோ திட்டத்திற்கு 65 ஏக்கர் நிலம் கையகபடுத்தபட உள்ளது. இந்த நிலங்களை கையபடுத்தபடும் போது யாரையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டும் நில உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பிடு வழங்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.