இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் இருந்து பணிக்கு செல்லக்கூடிய பொதுமக்களை குறி வைத்து கிரெடிட் கார்டு ஆனது வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.
ஆரம்பத்தில் இலவசமாக தானே கிடைக்கிறது, என்று நம்பி வாங்குவதால் கிரெடிட் கார்டு வாங்கக்கூடிய அனைவரும் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதே இல்லை.
கிரெடிட் கார்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் விதம் குறித்து பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் தன்னுடைய youtube சேனலில் தெரிவித்திருப்பதாவது :-
போரூரில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கிரெடிட் கார்டின் கடன் தொகை காரணமாக தற்கொலை செய்து கொண்டது கேள்விப்படவே மிகவும் வருத்தமாக இருந்தது. நான் இந்த கிரெடிட் கார்டு குறித்து பலமுறை கூறியிருக்கிறேன். நம்முடைய சமுதாயம் இந்த அளவிற்கு வளர்ந்த பிறகும் கூட கிரெடிட் கார்டிற்காக ஒரு உயிர் போவது என்பது மிகவும் மோசமான விஷயமாகவே நான் பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
ஏழாவது மட்டுமே படித்த இந்த ஆட்டோ ஓட்டுனருக்கு 3 வங்கிகளில் மூன்று லட்சம் வரையிலான கிரெடிட் கார்டுகளை வழங்கி இருப்பதாகவும், இதனை எவ்வாறு பயன்படுத்துவது இதில் கூட்டு வட்டி போடுவார்கள் என்பது கூட அறியாத அந்த ஆட்டோ ஓட்டுனர் இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ளவே, கிரெடிட் கார்டு கொடுத்த அனைத்து வங்கிகளும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததால் அழுத்தம் தாங்காமல் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றாக படித்த சிலரும் இதுபோன்ற கிரெடிட் கார்டு சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் பொழுது மிகவும் குறைவாக படித்த இவர் எப்படி இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறியவர், இப்பொழுதெல்லாம் கிரெடிட் கார்டுகள் பெட்ரோல் பங்க் வாசலிலும் சாலைகளிலும் நின்று ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அதிக அளவில் ஏமாற்றி விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கிரெடிட் கார்டு என்பது அன்றாட வாழ்நிலையில் மிகவும் முக்கியமான ஒன்று என்ற பொய்யான பிம்பத்தை வங்கிகள் உருவாக்குவதாகவும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறியிருக்கிறார். மேலும், மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய ஒருவருக்கு 3 லட்சம் மதிப்பிலான கிரெடிட் கார்டை கொடுப்பது என்பது சரியான விஷயமா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கிரெடிட் கார்டினை பெறுவதன் மூலம் நிறைய ரிவார்ட் பாயிண்ட்ஸ் மற்றும் ஏர்போர்ட்டில் இந்த சலுகைகள் உள்ளது என பல்வேறு சலுகைகளை காட்டி விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் பெண் அதிக வட்டி வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்த இவர், கிரெடிட் கார்டு வாங்கியவர்களால் திரும்பத் தர முடியவில்லை என்றால் அதை வாராக்கடனாக அறிவித்துவிட்டுத் திரும்ப வசூல் செய்து கொள்ளலாம். ஆனால், மத்திய அரசு அதைச் செய்ய மறுக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக தொழிலதிபர்களுக்கு 10.61 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது என்றும் வருத்தப்பட்டுள்ளார் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள்.