இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி மொத்தமாக 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஆனால் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது போட்டியில் சமனில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் டிராவிஸ் ஹெட். அதுவும் குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கும் முக்கிய வீரர். மூன்றாவது போட்டியில் 150 ரன்கள் அடித்து அபார ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் 4 வது போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது அவர் 4வது போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியில் சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் ஸ்காட் போலன்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த நானகவது போட்டியானது நாளை மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.