டெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் இன்று 5 மாநில ஆளுநர்கள் மாற்றினர். ஒடிசா ஆளுநர் ரகுபர்தாஸ் அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். அதன்படி புதிதாக மணிப்பூர் ஆளுநராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கபடுள்ளர்.
அடுத்துதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், பிகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பிகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தற்போது கேரள ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்போது மிசோரம் ஆளுநராக இருந்த ஹரிபாபு கம்பம்பட்டி, இப்பொழுது ஒடிசா மாநில ஆளுநராக நியமிகபட்டுள்ளர்.
அடுத்ததாக மிசோரம் ஆளுநராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த திடீர் ஆளுநர் மாற்றத்திற்கு தற்போது வருகிற தேர்தல் அதிக இடங்களில் வெற்றி பெற எது மாதிரி மாற்றங்களை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது என அரசியல் வட்டரங்கள் கூறுகின்றனர்.