ராஜஸ்தான்: மாநிலத்தில் ஜெய்ப்பூர் நகரில் கடந்த 20-ம் தேதி கோர விபத்து நடந்து. கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் பங்கில் அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பங்கில் எல்பிஜி நிறுவனத்தின் சிஎன்ஜி கேஸ் டேங்கர் ஒன்று பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அப்போது இந்த வழியாக அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்து சிஎன்ஜி கேஸ் டேங்கர் மீது போதி இருக்கிறது.
அப்போது, பலத்த சத்தத்துடன் டேங்கர் வெடித்து தீ பற்றி எரிந்து உள்ளது. அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு மளமளவென தீ பரவி இருக்கிறது. இந்த தீ விபத்தில் சம்ப இடத்திலேயே 5 பேர் உடல் கருகி உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும், பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது தீ பற்ற தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் 40 அதிகமானோர் பலத்த காயமடைந்தானர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். தற்போது அவசர பிரிவில் அனுமதித்த 15 பேர் இறந்துவிட்டனர். மொத்தமாக தற்போது வரை 17 பேர் இறந்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல் துரையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.