சிங்கிள்ஸ் குறிவைக்கும் பெண் இதுவரை 6 திருமணம்!! 7-வதாக மாட்டியது எப்படி?

Photo of author

By Vinoth

உத்தரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசம் மாநிலம் பண்டாவில் கடந்த 2 வருடங்கள் திருமணம் செய்தது ஓன்று அல்லது இரண்டு மாதங்களில் பணம் நகை கொள்ளை சம்பவம் நடந்துவந்துள்ளது. இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்துள்ளனர். அதில் கடந்த சனிக்கிழமை மதியம் சங்கர் என்பவருக்கு திருமணம் வரன் தேடித்தருவதாக விமலேஷ் என்பவரை சங்கரை அணுகி உள்ளார். அதில் உங்களுக்கு ஏற்ற பெண் ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் பூனம் அவரை நான் அறிமுகம் செய்தது வைக்கிறேன்.

அதற்க்கு எனக்கு 1.50 லட்சம் பணம் கமிசனாக கேட்டுள்ளார். அதற்க்கு சங்கர் சரி பெண் பிடித்து இருந்தால் திருமணம் முடிந்து கொடுப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் பூனம் அவர்களை சங்கர் சந்தித்த போது அவர் சரியாக பதிலளிக்க வில்லை. அவரிடம் ஆதார் கேட்டபோது அவரிடம் இல்லை நான் அப்புறம் தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். நான் திருமணம் செய்ய மறுத்தபோது, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவதாகவும், பொய் வழக்குகளில் சிக்க வைப்போம் என்றும் மிரட்டினர்.

நான் யோசிக்க நேரம் வேண்டும் எ ன்று கூறிவிட்டு வெளியேறினேன் என்று சங்கர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். புகரைத் தொடர்ந்து கும்பலை சேர்ந்த நான்கு பேரையும் போலீஸ் கைது செய்தது. மேலும் அவர்களிடம் விசாரனை செய்தபோது அதில் பெண்ணாக பூனம், அம்மாவாக சன்சனா குப்தா, அப்பாவாக தர்மேந்திர பிரஜாபதி மற்றும் பெண் அமைப்பாளர் விமலேஸ் வர்மா நடித்துள்ளனர். சங்கருக்கு முன்பே 6 பேரிடம் இந்த கும்பல் வெற்றிகரமாக வேலையை காட்டி உள்ளது.

திருமணமாகாத ஆண்களை ஏமாற்றி, அவர்களது வீடுகளில் இருந்த பணம் மற்றும் நகைகளைத் திருடும் மோசடியில் ஈடுபடுவது இவர்களின் வழக்கம். இது போல யாரும் ஏமாற்றம் அடையவேண்டாம் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.