நோய்நொடியின்றி வாழ நாம் ஆரோக்கியமாக உணவுகளை உட்கொள்ள வேண்டும்.நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் சளி,இருமல்,அல்சர்,மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.
மஞ்சள் காமாலை
மிளகு மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து வறுத்து பொடியாக்கி பசு மோரில் கலந்து குடித்து வந்தால் ஒரு வாரத்தில் மஞ்சள் காமாலை குணமாகும்.
அல்சர்
வெந்தயத்தை பொடித்து இளநீரில் கலந்து பருகி வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் குணமாகும்.
சளி இருமல்
சுக்கு,மிளகை பொடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் மூன்று தினங்களில் சளி,இருமல் குணமாகும்.
தலைவலி
சுக்கை பசும் பாலில் அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
வாயுத் தொல்லை
காட்டி பெருங்காயத்தை வறுத்து பொடித்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை நீங்கும்.
நிம்மதியான தூக்கம்
ஒரு தேக்கரண்டி கசகசாவை பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
வாய் துர்நாற்றம்
பெருஞ்சீரகத்தை கொரகொரப்பாக அரைத்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
மூக்கடைப்பு
திப்பிலி,சுக்கை பொடித்து நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் மூக்கடைப்பு குணமாகும்.
சர்க்கரை
இலவங்கப்பட்டையை பொடித்து சூடான நீரில் கலந்து பருகினால் சர்க்கரை நோய் குணமாகும்.
உடல் சூடு
கசகசாவை பொடித்து தேங்காய் பாலில் கலந்து பருகி வந்தால் உடல் சூடு குறையும்.
கெட்ட கொலஸ்ட்ரால்
தண்ணீரில் சீரகத்தை கொதிக்க வைத்து பருகி வந்தால் கொலஸ்ட்ரால் குறைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
மலக்கட்டல்
உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகி வந்தால் மலக்கட்டல் பிரச்சனை சரியாகும்.