ஆண்குறி விதைப்பை வீக்கம் குணமாக.. இந்த எண்ணையை சூடுபடுத்தி அங்கு பூசுங்கள்!!

Photo of author

By Divya

ஆண்களின் ஆண்குறிக்கு கீழ் முட்டை வடிவில் பை ஒன்று இருக்கிறது.இதை தான் விதைப்பை என்று சொல்கின்றோம்.இந்த விதைப்பையில் விந்து மற்றும் ஹார்மோன்கள் உற்பத்தியாகிறது.

விதைப்பையில் அடிபடுதல்,அடிக்கடி உடலுறவு கொள்ளுதல்,விதைப்பை மென்மையாக இருத்தல் போன்ற காரணங்களால் அவற்றில் வீக்கம் ஏற்பட்டு அதிக வலி உண்டாகிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாகவும் விதைப்பையில் வீக்கம் ஏற்படக் கூடும்.தற்போதைய காலகட்டத்தில் முப்பது,முப்பத்தைந்து வயதை கடந்தவர்களுக்கு விதைப்பை வீக்கம் ஏற்படுவது அதிகரித்து காணப்படுகிறது.

யாருக்கு விதைப்பை வீக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது தெரியுமா?

*உடல் பருமன்
*இதய நோய்
*சீரற்ற இரத்த ஓட்டம்
*நீண்ட நேர உடலுறவு

விதைப்பை வீக்க அறிகுறிகள் இதோ:

1)அளவிற்கு அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு
2)துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுதல்
3)நிறம் மாறிய சிறுநீர்
4)சிறுநீர் வெளியேற்றும் பொழுது வலி அனுபவித்தல்

ஆண்குறி விதை வீக்கத்தை குணமாக்கும் இயற்கை வைத்தியம்:

தேவையான பொருட்கள்:

*கழற்சிக்காய் விதை பொடி – ஒரு தேக்கரண்டி
*பால் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கழற்சிக்காய் பொடி தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கழற்சிக்காய் விதை பொடி கலந்து பருகி வந்தால் விதைப்பை வீக்கம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)ஐஸ்கட்டி

பயன்படுத்தும் முறை:

விதைப்பையில் வீக்கம் உள்ள இடத்தில் ஐஸ்கட்டிகளை கொண்டு தினமும் இரண்டு முதல் மூன்று முறை அழுத்தம் கொடுத்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

1)கழற்சிக்காய் – ஒன்று
2)ஆமணக்கு எண்ணெய் – 25 மில்லி

பயன்படுத்தும் முறை:

ஆமணக்கு எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.பிறகு ஒரு கழற்சிக்காயை இடித்து அதில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு வடித்து விதைப்பை மீது தடவி வந்தால் வலி,வீக்கம் குறைந்துவிடும்.அதேபோல் வெறும் கழற்சிக்காயை மட்டும் அரைத்து விதைப்பை மீது பூசினாலும் பலன் கிடைக்கும்.