சளி இருமலுக்கு நாட்டு வைத்தியர் சொன்ன ரகசிய சூரணம் இது!! ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

பெருந்தும்பை என்று அழைக்கப்படும் பேய்மிரட்டி ஒரு அபூர்வ மூலிகையாகும்.அக்காலத்தில் இது கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது.பேய்மிரட்டி இலையை பற்ற வைத்து புகை மூட்டினால் கொசுக்கள் நடமாட்டம் குறையும்.

இந்த பெய்மிரட்டி சளி,இருமல்,காய்ச்சல்,அம்மை,காலார,மலக்கழிச்சல்,வயிற்று வலி,மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.

சளி,இருமலை குணப்படுத்தும் பேய்மிரட்டி கசாயம் தயாரிப்பு முறை இதோ:

தேவையான பொருட்கள்

1.பேய்மிரட்டி இலை – 10
2.பேய்மிரட்டி வேர் – சிறிதளவு
3.பேய்மிரட்டி தண்டு – 20 கிராம்
4.பேய்மிரட்டி பூ – ஐந்து

செய்முறை விளக்கம்

பேய்மிரட்டி செடியில் இருந்து இலை,பூ,தண்டு மற்றும் வேர் ஆகியவற்றை சேகரித்து வரவும்.

பிறகு இதை மண்,தூசு இன்றி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்றாக உலர்த்தி கொள்ளவும்.

அதன் பிறகு மிக்சர் ஜாரில் இவற்றை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து கொள்ளவும்.இந்த பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

பேய்மிரட்டி கசாயம் செய்வது எப்படி?

பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு தயாரித்து வைத்துள்ள பேய்மிரட்டி சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் சளி,இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தினமும் பேய்மிரட்டி பொடியில் டீ செய்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றுப்போக்கு,வாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்கும் அருமருந்தாக பேய்மிரட்டி உள்ளது.

அதேபோல் பேய்மிரட்டி இலை சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பருகினால் காலரா,அம்மை,மலக்கழிச்சல் போன்றவை குணமாகும்.