மதுரையில் நடந்த சோக சம்பவம்!! நாய்கள் கடித்ததில் 32 பேர் மரணம்!!

Photo of author

By Gayathri

மதுரையில் நடந்த சோக சம்பவம்!! நாய்கள் கடித்ததில் 32 பேர் மரணம்!!

Gayathri

Tragedy happened in Madurai!! 32 people died after being bitten by dogs!!

மதுரை மாநகராட்சி பகுதியில் நாய்கள் கடித்ததால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு இதுவரையில் 32 பேர் உயிரிழந்ததாக ஆர்டிஐ மூலம் வெளியான தகவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அவை பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சிறுவர் சிறுமிகளையும் தொடர்ந்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற மாநகராட்சி மாமன்ற கூட்டங்களின் போது மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து வந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

Rti அலுவலரான என்ஜி மோகன் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாய்கடி பாதிப்பு சிகிச்சை குறித்த விவரங்களை கொடுக்குமாறு மனு ஒன்றினை அளித்திருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது :-

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மற்றும் நாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரங்களை குறித்து அதில் கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட பதில் பின்வருமாறு :-

✓ 2020 ஆம் ஆண்டு 30,168 பேர் நாய் கடியால் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும், அதில் ஒருவர் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

✓ 2021 ஆம் ஆண்டு 29, 100 சிகிச்சை பெற்றதில் 5 பேர் ரேபிஸ் நோய் வந்து இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ 2022 ஆம் ஆண்டு 30,391 பேர் சிகிச்சை பெற்றதில் 5 பேர் ரேபஸ் நோயால் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

✓ 2023 ஆம் ஆண்டு 23,741 பேர் சிகிச்சை பெற்றதில் 11 பேர் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

✓ இறுதியாக இந்த ஆண்டு 2024 இல் 20,123 பேர் சிகிச்சை பெற்றதோடு அதில் 10 பேர் ரேபிஷ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் ராஜாஜி அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மதுரை மாநகராட்சி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததால் 1,33,523 பேர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் அதில் 32 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்ததாகவும் ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி இருக்கிறது.

RTI ஆர்வலர் மோகன் அவர்கள் கூறுகையில், மதுரை மாநகராட்சியில் உள்ள தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை சிகிச்சை அதிக அளவில் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி தரப்பில் இது குறித்த செயல்பாடுகள் அதிவேகமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை குறித்து உடனடியாக கணக்கீடு செய்ய வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.