அம்பேத்கர் மீது மரியாதை இல்லாத திமுக!! பாமக நிறுவனர் குற்றச்சாட்டு!!

0
99
DMK has no respect for Ambedkar!! Bamaka founder accused!!
DMK has no respect for Ambedkar!! Bamaka founder accused!!

சென்னை: அம்பேத்கர் மீது மரியதை இருந்தால் திமுக அரசின்  திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டுவதற்கு தயாராகிருகிறதா? பாமக நிறுவனர் ராமதாஸ் அவர் வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி அம்பேத்கர் தான் பாமகவின் கொள்கை வழிகாட்டி இருக்கிறார். இந்தியாவிலேயே பட்டியல் இனம் அல்லாதவரால் தொடங்கப்பட்ட கட்சிக்கு அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட ஒரே காட்சி பாமக தான்.  எங்கள் வீட்டில் அவரது உருவ சிலையை அமைத்திருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஏழு இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறந்தது வைத்தேன்.

ஆனால் அம்பேத்கரின் பெருமைகளை காப்பதற்காக பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் திமுக அம்பேத்கருக்காக என்ன செய்தனர். 1949-ஆம் ஆண்டில் திமுக தொடங்கப்பட்டது அதன் பின் 1989-ஆம் ஆண்டில் தான் பாமக தொடங்கப்பட்டது. இடைப்பட்ட 40 ஆண்டு காலத்தில் அம்பேத்கரை பற்றி திமுக எத்தனை முறை பேசியது. இந்தியா  முழுவதும் சட்ட கல்லூரிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டும் விளக்கம் ஏற்பட்ட பிறகு தான் 1990-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட  சென்னை சட்டக் கல்லூரிக்கும், 1997-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கும் அம்பேத்கரின் பெயரை திமுக சூட்டியது.

இன்று வரை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்படவில்லை. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 40க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளன. பெயர் மட்டும் அல்ல தமிழகத்தின் நலனுக்கு எந்த பங்களிப்பும் செய்யாத அவரது தாயார் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த புதிய திட்டத்திற்கும் கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயர் சூட்டப்படவில்லை இதுதான் அம்பேத்கருக்கு செலுத்தும் மரியாதையா என திமுக அரசு விளக்க வேண்டும். அரசின் திட்டங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் கேள்வி எழுப்பினர்.

Previous articleமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்!! எப்ஐஆர்-யை வெளியிட்டது யார்? அண்ணாமலை திமுகவிற்கு கண்டனம்!!
Next articleசாட்டையால்  அடித்துக் கொள்ள போகிறேன்.. பாஜக அண்ணாமலை!!  திமுகவை எதிர்த்து  நூதன போராட்டம்!!