2 வருடம் திணறும் சிபிசிஐடி போலீஸ்!! வேங்கைவயல் நடப்பது என்ன?

0
142
CBCID police is stuck for 2 years!! What is going on in the banyan field?
CBCID police is stuck for 2 years!! What is going on in the banyan field?

புதுக்கோட்டை:  மாவட்டம் வேங்கைவயல்  மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. கடந்த 2022 டிசம்பர் 26-இல் இது சம்பவம் தெரியவந்தது. இது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகின்ற. ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. இதில் 220க்கும் மேற்பட்டவரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸ். மேலும்  ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியது. ஒரு காவலர் உட்பட ஐந்து பெயர் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும்  10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்து அனுமதிக்குரிய மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. குற்றம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு ஸ்பெஷல் கோர்ட்டில் நடந்த வரும் இந்த வழக்கில் குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. மாதம்தோறும் கோர்ட்டில் ஆஜராகம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க கூடுதல் அவகாசம் மட்டுமே கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகை கண்டறியாமல் இருப்பதில் வேறு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக வெளியூர் ஆட்கள் வேங்கைவயலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 2023 மார்ச் மாதத்தில் இருந்து ஊரை சுற்றிலும் 7  இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்க்கு விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களின் என கூறபடுகிறது.

Previous articleசாட்டையால்  அடித்துக் கொள்ள போகிறேன்.. பாஜக அண்ணாமலை!!  திமுகவை எதிர்த்து  நூதன போராட்டம்!!
Next articleகல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! கல்வி உதவித்தொகை பெற தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!