2025 ஆம் ஆண்டில் 15% கட்டண உயர்வு!! ரீசார்ஜ் கட்டணங்களின் உயர்வால் அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!!

0
116
15% fare hike by 2025!! Customers in fear of increase in recharge charges!!
15% fare hike by 2025!! Customers in fear of increase in recharge charges!!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் கட்டண உயர்வு செய்யத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 முறை கட்டண உயர்வை அமல்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களின் கட்டண உயர்வின் காரணமாக பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வரக்கூடிய இந்த தருணத்தில், தங்களுடைய மாதாந்திர பேக்கேஜில் பல்வேறு சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இப்படி உள்ள சூழ்நிலையில், 2025 ஆம் ஆண்டில் மேலும் பதினைந்து சதவிகித கட்டண உயர்வு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியிருப்பது வேதனை அளிக்கும் செய்தியாகவே உள்ளது.

மேலும் இந்த உயர்வுகள் தொழில்துறையின் உடைய வருவாயை முன்னேற்றி இருப்பதாலும் சராசரி வருமான அளவுகளை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டணங்கள் தொடர்ந்து உயர்த்தப்படுவதாக மோதிலால் ஓஸ்வால் மற்றும் பிற நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த கட்டண உயர்வால் வாடிக்கையாளர் எதிர்ப்பு கூடும் வாய்ப்பு உள்ளதோடு மட்டுமல்லாது சேவை தரம் மற்றும் விலைக்கான நெருக்கடி தொழில் முறையில் அதிக அளவில் காணப்படும் என்றும் இவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்களினுடைய வருமான மேம்படுத்துதல் என்னும் நோக்கத்தால் இவ்வாறு அடிக்கடி கட்டண உயர்வுகள் நிகழ்கிறது என்றும் இதனை தொடர்ந்து உயர்த்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous articleபஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம்!! சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தகவல்!!
Next articleஇனி சொறி சிரங்கு தேமல் படை பற்றிய கவலை வேண்டாம்!! இந்த இலையை அரைத்து பூசினால் பலன் கிட்டும்!!