அண்ணாமலை மிகப்பெரிய ஊழல்வாதி!! ஆதாரங்களுடன் X தளத்தில் பகிர்ந்த திருச்சி சூர்யா!!

0
203
Annamalai is the biggest corrupt person!! Trichy Surya shared on X site with sources!!
Annamalai is the biggest corrupt person!! Trichy Surya shared on X site with sources!!

அண்ணாமலை எப்பொழுதும் தனது தலைமையில் தான் கட்சி வளர்ந்ததாக கூறுவார் ஆனால் அண்ணாமலை மிகப்பெரிய ஒரு ஊழல்வாதி என்று ஆதாரங்களுடன் திருச்சி சூர்யா அவர்கள் தன்னுடைய எஸ்தலத்தில் பகிர்ந்து இருப்பது தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பாஜகவின் முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து இருப்பதாவது :-

அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களை மட்டு அல்லாது தன்னுடைய அரசியல் கட்சியின் உயர் அதிகாரிகளையும் ஏமாற்றிய குற்றச்சாட்டில் பெரிய பங்கு வகிக்கிறார் என்றும் ஒன்றிய அரசின் வருமானவரித்துறையின் விசாரணைக்கு இது உட்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 167 கோடி ரூபாய் தங்கம் கடத்தல், 800 கோடி ரூபாய் வெளிவராத சொத்துக்கள் மற்றும் திண்டுக்கல் சத்திரப்பட்டி செந்தில் குமாருக்கு சொந்தமான 240 கோடி ரூபாய் வரியைப்பு என சமீபத்தில் டெல்லியில் நடந்த விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை என்பவர் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். இவருடைய உண்மையான ரூபத்தை காட்டாமல் சித்தரிக்கும் விதமாக அண்ணாமலையின் தேர்தல் அறிவிப்பு வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தியது. மேலும் 60 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலத்தின் உரிமையை இவர் காட்டி இருக்கிறார் என்றும் திருச்சி சூர்யா தெரிவித்திருக்கிறார்.

மேலும் இவருடைய தந்தை கரூரில் ஒரு முக்கிய நிதியாளராக கடன்களை வழங்கி வருகிறார் என்றும் அப்படி வழங்கப்பட்ட கடன் தொகை 40 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.இவருடைய தந்தை மட்டும் இன்றி சகோதரி ஒரு பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார் என்றும் கடந்த 3 வருடங்களில் அவர்கள் ஸ்ரீ சரவணா சாலிட் செங்கல், ஸ்ரீ சரவணா ரெடிமிக்ஸ் கான்கிரீட், அண்ணாமலையார் சேம்பர் செங்கல் போன்று தங்களுடைய தொழில்களை அதிக அளவில் வெளிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை அவர்களுக்கு நிதி பிரச்சனை உள்ளது என்றும் வீட்டு வாடகை அவரது நண்பர்களால் செலுத்தப்படுகிறது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய மனைவி அகிலாவின் வங்கி இருப்பு 2021ல் 13 இலட்சமாக இருந்ததும், தற்பொழுது 2024 அது 98 லட்சம் ரூபாயாக உயர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்னும் பல மோசடிகளிலும் இவர் ஈடுபட்டு வந்திருக்கிறார். எனினும் இவர் தனது போராறையை முதலில் சுரானா கட்டத்தில் நிறுவி பின்னர் அடையாறுக்கு மாற்றியுள்ளார். இதில் 9593 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடிக்காக சுரானாவை அமலாக்கத்துறையிடமிருந்து அண்ணாமலை காப்பாற்ற முயன்றும், அது முடியாமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்ணாமலை அவர்களுக்கு வசூல் முகவராக அமர் பிரசாத் ரெட்டி இருந்து வந்திருக்கிறார். அவர் ஆருத்ரா தங்கத்திடமிருந்து பணத்தைப் பெற்று அவர்களை கைதியிலிருந்து பாதுகாப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். அவர்களுடைய கெட்ட சகுனமோ என்னவோ அவர்களின் இன்டர் போலால் கைது செய்யப்பட்டு தற்பொழுது துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமின்றி அவரது தனிப்பட்ட செயலாளரான சிஆர் சிவக்குமார் கோயம்புத்தூரில் “ராகின்டோ சிட்டிக்காக” பெரிய அளவில் நில பேரங்கள் செய்து , இந்த ஆண்டு தேர்தலுக்குப் பின் கோவையில் நவ இந்தியா பகுதியை பெரிய ஷாப்பிங் இருக்கு மேம்படுத்தும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கோவையில் நவ இந்தியா பகுதியை பெரிய ஷாப்பிங் இருக்கு மேம்படுத்தும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் திருச்சி சூர்யா தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையில் அண்ணாமலை ஒரு மிகப்பெரிய ஊழல்வாதி. அவருடைய தலைமையில் கட்சி வளரவில்லை உண்மையில் அவருடைய சொத்துக்கள் மட்டுமே வளர்ந்திருக்கின்ற என்றும் தெரிவித்திருக்கிறார்.

Previous articleநடிகர் சூர்யாவின் மறைக்கப்பட்ட உண்மை!! விபத்தில் சிக்கிய கார்த்தி!!
Next articleமுன்னாள் பிரதமர் மறைவுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!!