இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 வது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது நாளாக இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 78 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் கே எல் ராகுல் இந்த போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா 6 வதாக களமிறங்கினார். மேலும் இந்த நான்காவது போட்டியில் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். இந்நிலையில் ரசிகர்கள் கே எல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி நன்றாக விளையாடி வந்த நிலையில் அவருக்கு வரிசை மாற்றப்பட்டது. எனவே ராகுல் அவுட் க்கு காரணம் ரோஹித் சர்மா தான், அவரும் விளையாட மாட்டார் விளையாடுவரையும் விட மாட்டார் என பல விதமான என்று கடுமையான விமர்சனத்தை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.