cricket: இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் 3 வதாக களமிறங்கினார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து மூன்றாவது போட்டியில் சமன் செய்தது. தற்போது நான்காவது போட்டி நேற்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஆஸ்திரேலியா அணி. முதல் இந்நிக்சில் 474 ரன்கள் குவித்தது. இரண்டாவது களமிறங்கிய இந்திய அணி தற்போது 128 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
மேலும் இந்த போட்டியில் கே எல் ராகுல் ஒரு முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். இந்த தொடரில் அதிக ரன் அடித்த வீரர்களில் 235 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் அவர் இந்த போட்டியில் 3 வது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதனால் அவர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அவர் இந்திய அணியின் நிரந்தர இடத்தை பிடிக்க நன்றாக விளையாடும் போதெல்லாம் அவர் வரிசை மாற்றப்படும் அநீதி நடைபெற்று வருகிறது. அவர் இதுவரை 1 முதல் 6 வரிசை வரை களமிறங்கி விளையாடியுள்ளார்.