Punjab: பஞ்சாப் மாநிலத்தில் 11 ஆண்களை கொலை செய்த சீரியல் கில்லரை போலீசாரால் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆண்களை மட்டும் குறிவைத்து கொலை செய்யும் சீரியல் கில்லரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த நபர் கொடுத்த வாக்குமூலம் பஞ்சாப் மாநிலத்தை பதற வைத்து இருக்கிறது. அதாவது, ஹோஷியார்பூர் மாவட்ட பகுதியில் வசித்து வருபவர் ராம் சரூப் அவருக்கு 33 வயதாகிறது. தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.
இவர் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை பயன் படுத்தி வந்து இருக்கிறார். மது போதைக்கு அடிமையாகி இருக்கும் இவர். காலையில் வேலைக்கு சென்ற பிறகு மாலை வீடு திரும்பும் போது நெடுஞ்சாலைகளில் நடந்து செல்பவர்களிடம் தாமாக முன் வந்து லிப் கொடுப்பதாக கேட்டு வருவார். எனவே இவருடன் இருசக்கர வாகனத்தில் லிப்டில் வரும் முன் பின் தெரியாத நபர்களை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று இருக்கிறார்.
அங்கு சென்ற அவர்களின் பின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்வது யாருக்கும் சந்தேகம் வராதபடி தப்பித்து இருக்கிறார். சமீபத்தில் மோத்ராவில் உள்ள சுங்கச்சாவடி அருகே டீ விற்ற 37 வயதுடைய நபரை கொன்று இருக்கிறார். இந்த வழக்கில் காவல் துறையினரால் ஹோஷியார்பூர் மாவட்டதில் இருக்கும் போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.
அதில் இதுவரை லிப்ட் கொடுத்து 11 ஆண்களை கொன்று இருப்பதாகவும், குடி போதையில் தான் இப்படி செய்வதால் அவர்களை கொலை செய்த பிறகு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறினார். மேலும், கொலை செய்யப்பட்ட ஆண்களின் சடலங்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.