இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 4 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது நேற்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தடுமாறிய நிலையில் 164 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
மேலும் இந்திய அணி நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் மூன்று போட்டியில் படுதோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்தது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை அதனால் மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் இவர்தான் அந்த தொடரை இழக்க காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடக்க வீரராக களமிறங்காமல் 6 வதாக களமிறங்கி விட்டார். ஆனால் அவரால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். மேலும் இப்படியே இவர் இருந்தால் இந்த தொடரையும் இந்திய அணி இழக்க போகிறது அதற்கு காரணமும் ரோஹித் தான் என்று ரசிகர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இந்திய அணி 164 ரன்களுடன் போட்டி இன்று முடிவடைந்துள்ளது.