cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆஸ்திரேலிய ஊடகத்தினர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4 வது போட்டியானது நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று ஒரு பொட்டி சமனில் முடிவடைந்துள்ளது.
மேலும் இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டியில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு செல்லும் எனவே இந்த போட்டி மற்றும் 5 வது போட்டி என இரு போட்டிகளில் வென்றால் மட்டுமே அது சாத்தியம் என்பதால் கடுமையாக போராடி வரும் நிலையில் விராட் கோலி மீதான விமர்சனம் சர்ச்சையாகியுள்ளது.
விராட் கோலி சுற்றுப்பயணத்திற்கு வரும் முன் த கிங் இஸ் ரிட்டர்ன் என பத்திரிக்கைகளில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது தற்போது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் அறிமுக வீரரான கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையே சின்ன தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது அனைத்து ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து விராட் கோலி குறித்து அத்துமீறி பத்திரிகைகள் விமர்சித்து வருகின்றனர். அதில் CLOWN KOHLI என்றும் CRYBABY KOHLI எனவும் பத்திரிக்கையில் கடுமையான விமர்சனம் செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது இந்திய அணியின் வீரர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.