எல்லை மீறும் ஆஸ்திரேலியா.. சண்டைக்கு போன கோலி !! மைதானத்தில் நடந்தது என்ன??

0
119
kohli who went to fight
kohli who went to fight

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை வரம்பு மீறி கிண்டல் செய்த ஆஸ்திரேலிய ரசிகர்கள்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் உள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெரும் என்ற நிலையில் களமிறங்கியது.

ஆனால் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. இதில் ஸ்மித் 140 ரன்கள் விளாசினார். இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

https://x.com/iSanjanaGanesan/status/1872552809041957329

இந்நிலையில் விராட் கோலி கே எல் ராகுல் விக்கெட் க்கு பின் களமிறங்கினார். இவர் சிறப்பாக விளையாடி வந்தார். வழக்கம் போல் தொடர்ந்து செய்த அதே தவறை செய்து மீண்டும் 36 ரன்களில் விக்கெட் இழந்தார். ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது ஆஸ்திரேலியா ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்து விமர்சித்தனர். இதை கேட்டு சென்று கொண்டிருந்த விராட் கோலி மீண்டும் வந்து பேசினார் ஆனால் அங்கிருந்த பாதுகாவலர் அவரை அனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிது.

Previous articleகாதலிக்க பிடிக்கும் ஆனால் கல்யாணம் பிடிக்காது!! நடிகர் கமல் மகள் ஓபன் டாக்!!
Next articleவிடாமுயற்சி: Sawadeeka பாடலின் லிரிக் வீடியோ மதியம் 1 மணிக்கு வெளியானது!!