குடலை முழு சுத்தமாக்கும் கொய்யா இலை!! இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கல் வாயுக் கோளாறு நீங்கும்!!

0
81
Guava leaf cleans the intestines!! If you use it like this, you will get rid of constipation and gas!!
Guava leaf cleans the intestines!! If you use it like this, you will get rid of constipation and gas!!

கொய்யா இலையை வைத்து தயாரிக்கப்படும் பானம் மற்றும் பொடி உடலில் பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.கொய்யா இலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்,வைட்டமின்கள்,நார்ச்சத்து,புரதம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இவை குடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.கொய்யா இலை வாயுத் தொல்லை,மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை – ஒரு கைப்பிடி
2)பூண்டு பற்கள் – இரண்டு
3)பெருங்காயத் தூள் – அரை தேக்கரண்டி
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)வெந்தயம் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

*முதலில் ஒரு கைப்பிடி கொய்யா இலையை வெயிலில் போட்டு நன்றாக காய வைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு அடுப்பில் வாணலி வைத்து இரண்டு பல் தோல் நீக்கிய பூண்டு,ஒரு கட்டி பெருங்காயம்,ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு இந்த பொடியை அரைத்த கொய்யா இலை பவுடரில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கொய்யா இலை பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை – ஒரு கப்
2)இந்துப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

*முதலில் கொய்யா இலை ஒரு கப் அளவிற்கு எடுத்து வெயிலில் போட்டு நன்றாக உலர்த்தி பொடியாக்கி கொள்ள வேண்டும்.

*பிறகு இந்துப்பை வறுத்து பொடியாக்கி கொய்யா இலை பொடியில் கலந்து சேமித்துக் கொள்ள வேண்டும்.இதை தினமும் வாயில் கொட்டி சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறு,வாய் துர்நாற்றம் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை – இரண்டு
2)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

*முதலில் இரண்டு கொய்யா இலையை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு அதில் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை – இரண்டு
2)விளக்கெண்ணெய் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

*கொய்யா இலையை அரைத்து சாறு எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து பருகினால் பெருங்குடலில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

Previous articleபெஞ்சல், டங்க்ஸ்டன்.. இதற்கெல்லாம் சாட்டையை  சுழற்றாத அண்ணாமலை!! நெட்டிசன்கள் சரமாரி  கேள்வி!!
Next articleஇந்த நோய்களுக்கு அலோபதி மருந்து வேண்டாம்!! பாட்டி வைத்தியம் தெரிந்தால் போதும்!!