உடலில் அதிகப்படியான பலவீனத்தை ஏற்படுத்தும் TB அதாவது காசநோய் நுரையீரலை பாதிக்க கூடி நோயாக உள்ளது.காசநோய் ஒரு தொற்றுநோயாகும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு நோய் பாதிப்பாகும்.உலகில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது.
காசநோய் அறிகுறிகள்:-
*நெஞ்சு சளி மற்றும் தொடர் இருமல்
*திடீர் உடல் எடை குறைதல்
*சளியில் இரத்தம் வெளியேறுதல்
*மாலை நேர காய்ச்சல்
*உடல் மந்தம்
*மார்பு வலி
*இரவு நேரத்தில் அதிகம் வியர்த்தல்
காசநோயை குணமாக்கும் மூலிகை வைத்தியங்கள்:
1)தண்ணீர்விட்டான் கிழங்கு
2)அஸ்வகந்தா
3)அதிமதுரம்
இந்த மூன்று பொருட்களும் பொடி வடிவில் நாட்டு மருந்து கடை மற்றும் சித்த வைத்திய சாலையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.
பின்னர் இதை வைத்து காசநோயை குணமாக்கும் கஷாயம் ஒன்று செய்ய வேண்டும்.அதற்கு முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பிறகு 10 கிராம் தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி,10 கிராம் அஸ்வகந்தா பொடி மற்றும் 10 கிராம் அதிமதுரப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் காசநோய் குணமாகும்.
1)சீந்தில் இலை
2)சீந்தில் தண்டு
3)சீந்தில் வேர்
சீந்தில் கொடியில் இருந்து இலை,தண்டு மற்றும் வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு வெயிலில் நன்றாக உலர்த்தி பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்து வைத்துள்ள மூலிகை பொடியை கொட்டி கொதிக்க வைத்து பருகினால் காசநோய் குணமாகும்.
1)பூண்டு
2)தேன்
ஒரு பல் பூண்டை இடித்து பாத்திரம் ஒன்றில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் காசநோய் பாதிப்பு குணமாகும்.
1)ஆவாரம் பூ
2)தேயிலை தூள்
3)தண்ணீர்
4)தேன்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் அரை தேக்கரண்டி தேயிலை தூள்,இரண்டு தேக்கரண்டி ஆவாரம் பூ சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் காசநோய் கட்டுப்படும்.