பருக்கள்,காயங்கள்,அம்மை புண்கள் வடு மற்றும் தழும்பாக மாறி அழகை கெடுத்துவிடும்.இந்த தழும்புகளை நீக்க தற்பொழுது சிகிச்சை முறைகள் இருப்பினும் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு அவற்றை எளிதில் நீக்கிவிடலாம்.
தீர்வு 01:
1)காபித் தூள்
2)தேங்காய் எண்ணெய்
முதலில் அடுப்பில் சிறிய வாணலி ஒன்றை வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி காபித் தூள் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.இதை ஆறவைத்து தழும்புகள் மீது பூசினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.
தீர்வு 02:
1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
3)காபித் தூள் – ஒரு தேக்கரண்டி
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்,ஒரு தேக்கரண்டி காபித் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து ஆறவிட வேண்டும்.இந்த பேஸ்டை தழும்புகள் மீது அப்ளை செய்து உலரவிட்டால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.
தீர்வு 03:
1)கடுகு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)வேப்பிலை – ஒரு கொத்து
முதலில் வேப்பிலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த வேப்பிலை பேஸ்டை அதில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.
இந்த வேப்பிலை பேஸ்டை ஆறவைத்து தழும்புகள் மீது அப்ளை செய்து வந்தால் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தீர்வு 04:
1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
2)குப்பைமேனி இலை – கால் கப்
முதலில் மிக்சர் ஜாரில் கால் கப் குப்பைமேனி இலை போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து தழும்புகள் மீது அப்ளை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
தீர்வு 05:
1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
தழும்புகள் மீது எலுமிச்சை சாறு பூசி இரண்டு நிமிடம் மசாஜ் செய்த பிறகு அப்படியே உலரவிடவும்.ஒரு மணி நேரம் கழித்து அவ்விடத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தழும்பு மறைந்துவிடும்.