ஆண்களின் ஆண்மையை அதிகரித்து ஆண்மை குறைபாட்டை போக்கும் ஒரு ஆயுர்வேத மூலிகை பாதாம் பிசின்.இது பாதாம் மரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய ஒரு பொருளாகும்.இந்த பாதாம் பிசின் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதில் உள்ள புரோட்டீன் சத்துக்கள் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.
படுக்கையில் அதிக நேரம் சலிப்பின்றி உடலுறவில் ஈடுபட பாதாம் பிசின் பால் குடிக்க வேண்டும்.இதை எவ்வாறு தயாரிக்க வேண்டுமென்பது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பிசின் – இரண்டு தேக்கரண்டி
2)பாதாம் பருப்பு – 10
3)நாட்டு சர்க்கரை – 50 கிராம்
4)ஏலக்காய் – ஒன்று
5)ஜவ்வரிசி – மூன்று தேக்கரண்டி
6)தேங்காய் பால் – ஒரு கப்
7)நெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி பசு நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஜவ்வரிசி போட்டு மிதமான தீயில் வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து அரை கப் தேங்காயை தண்ணீர்விட்டு அரைத்து பால் எடுத்து அந்த வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
இதற்கு முன்னர் ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பாதாம் பிசின் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.பிறகு ஊறவைத்த பத்து பாதாம் பருப்பை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் சூடாக்கி கொண்டிருக்கும் தேங்காய் பாலில் நெயில் வறுத்த ஜவ்வரிசி சேர்த்து கலந்த விடவும்.
அடுத்து அரைத்த பாதாம் பருப்பு பேஸ்ட்டை அதில் போட்டு கலந்துவிடவும்.பிறகு ஊறவைத்த பாதாம் பிசின் மற்றும் வாசனைக்காக ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
மற்றொரு அடுப்பில் பாத்திரம் வைத்து 50 கிராம் நாட்டு சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து தயராகி கொண்டிருக்கும் பாதாம் பிசின் பாலில் ஊற்றி கலந்து அடுப்பை அணைக்கவும்.
இந்த பாதாம் பிசின் பாலை ஆறவைத்து குடிக்க வேண்டும்.வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த பால் குடித்து வந்தால் சோர்வின்றி அதிக நேரம் உடலுறவில் ஈடுபடலாம்.
அதேபோல் பாதாம் பிசினை பொடித்து ஒரு கிளாஸ் சூடான பாலில் கலந்து குடித்து வந்தாலும் உரிய பலன் கிடைக்கும்.