bangladesh: வாங்கதேசம் இந்தியாவை மிரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அரக்கன் ஆர்மியை அழிக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
சமீப காலமாக இந்தியா மற்றும் வங்கதேசத்தின் இடையே இருக்கும் உறவில் விரிசல் பெரிதாகி கொண்டே வருகிறது. இந்த உறவில் இந்தியாவை மிரட்ட மற்றும் மியான்மர் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் அரக்கன் ஆர்மியை கூண்டோடு ஒழித்து கட்டவும் திட்டம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்தியாவின் உதவியால் தான் வங்கதேசம் என்ற நாடு உருவானது. இதன் காரணமாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய நாட்டுடன் மிகவும் நட்பாக இருந்து வந்தார். மேலும் வங்கதேசத்தில் வன்முறை காரணமாக வங்கதேசத்தின் பிரதமர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். மேலும் தற்போது அங்கு நோபல் பரிசு பெற்ற ஆலோசகர் முகமது யூனுஷ் தலைமையில் வங்கதேச அரசானது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மியான்மரை கொண்டு செயல்பட்டு வரும் அரக்கன் ஆர்மி குழு வங்கதேசத்தில் உள்ள சில பகுதிகளை கைப்பற்றினர். இந்த அரக்கன் ஆர்மி வங்கதேசத்தை அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் தற்போது இந்தியாவை மிரட்டவும் அரக்கன் ஆர்மியை அழிக்கவும் வங்கதேச அரசு பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன் காரணமாக பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ எஸ் ஐ இடம் இருந்து ஆயுதங்கள் பெறப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.இதன் முக்கிய குறிக்கோள் அரக்கன் ஆர்மியை அழிப்பது. மற்றொன்று இந்தியாவை மிரட்டி பார்க்க நேரடியாக மோத முடியாமல் பாகிஸ்தானின் தொய்பா, லஷ்கர் ஜெயஷ் இ உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பை வைத்து இந்தியாவை சீண்ட முயற்சி செய்து வருகிறது.