இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான 4 வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி பேட்டிங் இல் தடுமாறி வந்த நிலையில் இந்திய அணியின் மானத்தை காத்து அதிரடியாக விளையாடி ரன் குவித்து சதம் விளாசியுள்ளார் நிதீஷ் குமார் ரெட்டி.
நேற்று முன் தினம் தொடங்கிய இந்த போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து 474 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் பேட்டிங் இன்னிங்ஸில் 164 க்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா குறைவான ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் மற்றும் நிதீஷ் இருவரும் அணிக்கு வெகுவாக ரன் சேர்த்தனர். மேலும் நிதீஷ் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 90 களில் இருக்கும் போது அடுத்து அடுத்து விக்கெட்டுகள் விழுந்து. மேலும் இவர் சதமடிப்பரா என்ற நிலைக்கு போன நிலையில் அவர் சதம் விளாசினார். இளம் வயதில் சதம் அடித்த வீரர்களில் 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். முதல் இடத்தில் சச்சின் மற்றும் இரண்டாவது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கின்றனர்.