cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் போட்டியில் ரிஷப் பண்ட் செய்த செயல் மூலம் அனைத்து மீடியா வும் அவர் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடினார் ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்பதால் இந்த போட்டியில் பும்ரா கேப்டனாக விளையாடினார். முதல் போட்டியில் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கினார். மேலும் இந்த தொடரில் அடுத்து நடந்த இரு போட்டிகளில் ரோகித் 6 வதாக களமிறங்கி விளையாடினார். ஆனால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து 4 வது போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி மீண்டும் சொதப்பினார் அதனால் அவர் கடுமையாக விமர்சிக்க பட்டு வரும் நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அந்த இடத்திற்கு வந்துள்ளார். மூன்றாவது நாளாக இன்று தொடங்கிய போட்டியில் முக்கிய வீரராக ரிஷப் பண்ட் மீது அனைவரின் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அவர் அவருக்கென பீல்டு நிற்க வைத்த இடத்திலேயே அவர் அதே ஷாட் அடித்து அவுட் ஆனார். எனவே மீண்டும் அவர் இந்த தொடரில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். எனவே அவர் மீது அனைத்து கிரிகெட் வல்லுனர்களும் அவரை விமர்சித்து வருகின்றனர்.