tamil nadu: தமிழக கர்நாடக எல்லை சோதனை சாவடியில் வட மாநில சுற்றுலா பயணிகள் போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரை காட்டில் தமிழக கர்நாடக எல்லையில் தமிழக காவல்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. நேற்று, அச் சோதனைச்சாவடியில் போலீசார் வடமாநில சுற்றுலா பயணிகள் கொடூர தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
அதாவது, உத்திர பிரதேச மாநிலம் பிரேக்யாராஜ் மாவட்டதில் இருந்து 43 பேர் ஆன்மீக சுற்றுலா செல்ல வாடகை பேருந்து ஒன்றின் வாயிலாக தென் இந்தியாவிற்கு வந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சுற்றுலா மேற்கொண்ட பிறகு கர்நாடகா மாதேஸ்வரன் மலைக் கோவிலுக்கு செல்ல மேட்டூர் வழியாக காரைக்காட்டு சோதனை சாவடிக்கு நேற்று (27.12. 24) பேருந்தில் வந்து இருக்கிறார்கள்.
அந்த சோதனை சாவடியில் உள்ள காவலர்கள் சோதனை செய்ய வடமாநில பேருந்தை நிறுத்தி ஓட்டுனரிடம் வாகனத்தின் ஆவணங்களை கேட்டு இருக்கிறார்கள். அதில் கோபமுற்று வட மாநிலத்தவர்கள் போலீசார் மீது கடப்பாறையை கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் தலைமை காவலர்கள் சுகனேஸ்வரன், செந்தில்குமார் ஆகிய இருவர் பலத்த காயம் அடைந்து இருக்கிறார்கள்.
அருகில் இருந்த ஊர் மக்கள் போலீசாருக்கு ஆதரவாக வடமாநிலத்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இச் சம்பவம் குறித்து தகவலறிந்த கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று வடமாநில சுற்றுலாப் பயணிகளை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். மேலும், எதற்காக தாக்குதல் நடத்தினார்கள் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.