cricket: இந்திய அணியின் இன்றைய நாயகனாக உள்ள நிதீஷ் ரெட்டி குறித்து கறுத்து தெரிவித்துள்ளார் ரவிசாஸ்திரி.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் தற்போது இன்று மூன்றாவது நாளாக 4 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாயகனாக இருந்து சதம் விளாசி அணியின் மானத்தை காத்த வீரராக இன்று மாரியுல்லவர் நிதீஷ் குமார் ரெட்டி.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் அப்போதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. எனவே போராடி வருகிறது இந்திய அணி.
இந்நிலையில் 4 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தடுமாறி வந்தது. முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் இந்திய அணியின் வீரர் நிதீஷ் குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி சதம் விளாசி விக்கெட் இழக்காமல் இருக்கிறார்.
மேலும் இந்த போட்டியில் இன்றைய கதாநாயகன் என்றே கூறலாம். இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறுகையில் நிதீஷ் இனி 7 வது வரிசையில் களமிறங்க மாட்டார் இதுவே அவருக்கு கடைசி அவர் top 5 இடத்தில் விளையாட தகுதி உள்ளவர் இனி வரும் போட்டிகளில் அவர் 5 இடத்திற்கு உள்ளே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.