மும்பை: பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் மரணம் அடைந்தார். பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். ஜமாத் உத் தாவா அமைப்பின் துணைத்தலைவராகவும் இருந்தார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கரே தொய்பா இணை நிறுவனர் ஹபீஸ் சையீத். இந்தியாவால் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதி இவரின் மைத்துனர் மக்கி. நீரழிவு நோய் காரணமாக லாபூர் தனியார் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சையில் இருந்து மரணம் அடைந்தார். சமூகநிலை செயல்பாடு என்ற போர்வையில் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டும் வேலையை செய்து வந்தார்.
கடந்த 2010 முதல் பாகிஸ்தான் அரசு கைது செய்து வீட்டு காவலில் வைத்தனர். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்த வழக்கில் 2020ல் அவர் ஆறு மாத காலம் தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் செயல்பாடுகள் முடங்கி அப்துல் ரஹ்மான் மத்திய சர்வதேச பயங்கரவாதியாக கடந்த ஆண்டு பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. பொருளாதார அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவும் தடை விதித்திருந்தது. 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் செங்கோட்டையில் புகுந்த ஆறு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். மூன்று ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் இறந்தனர். 2008 நவம்பர் 26 இல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் தக்கியிருந்தார்.
இதில் 166 பேர் கொல்லப்பட்டனர் 10 பயங்கரவாதிகளில் ஒன்பது பேரை நமது வீரர்கள் சுடப்பட்டனர். இது மட்டுமல்ல 2008 ஜனவரி 1 சி.ஆர்.பி.எப் முகாம் மீது நடந்த தாக்குதல், 2018 மே 30 பாரமுள்ளவில் நடந்த தாக்குதல், அதே ஆண்டு ஆகஸ்ட் 7 தேதி பந்தி போறாவில் நடந்த தாக்குதல், 2019 பிப்ரவரி 12 சி.ஆர்.பி.எப் முகாம் மீதான தாக்குதல் பின்னணியில் மக்களின் மூளையாக இருந்தவர். ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் மக்களின் தலைவராக இருந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகிறது.