actor dilip shankar: தனியார் ஹோட்டல் அறையில் பிரபல நடிகர் இறந்து சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் திலீப் சங்கர் அவருக்கு 54 வயதாகும் இவர் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர். ஏராளமான படங்களில் நடித்து இருக்கும் திலிப் சங்கர் “சப்பா குரிஷு, நார்த் 24 காதம்” என்ற இரண்டு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தார். மேலும், சின்னத்திரை நாடகத் தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி “பஞ்சாக்னி” என்ற நாடக தொடர் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் சாக நடிகர்கள் அவரை தொடர்பு கொள்ள தொலைபேசி அழைப்பு கொடுக்க அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே சந்தேகமடைந்த அவர்கள்.
திலீப் சங்கர், தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது அவர் தங்கியிருக்கும் அறை உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. மேலும், அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் அந்த அறையின் கதவுகளை திறந்து பார்த்த போது அதிர்ச்சி உள்ளாகியுள்ளார்கள். நடிகர் திலீப் சங்கர் இறந்து சடலமாக கிடந்து இருக்கிறார். இத் தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவர் இறப்புக்கு காரணம் தெரிய வரும் என கூறி இருக்கிறார்கள். மேலும், போலீசார் தீவிர விசாரணையில் திலீப் சங்கர் தங்கி இருந்த அறை இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. திலீப் சங்கர் இறப்பு செய்தியை அறிந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.