சிரிக்கும் பொழுது பற்களை வெண்மையாக பளபளப்பாக இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆசைக் கொள்கின்றனர்.ஆனால் வெள்ளை நிற பற்களை பெற நாம் சில விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.
தினமும் இருமுறை பற்களை துலக்க வேண்டும்.உணவு உட்கொண்ட பிறகு தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.பற்களில் உணவுத் துகள்கள் இருந்தால் அதை அப்புறப்படுத்த வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் மஞ்சள் படலங்கள் உருவாவது தடுக்கப்படும்.
பல் மஞ்சள் கறையை போக்கும் மூலிகை பேஸ்ட் தயாரிக்கும் முறை:
தேவைப்படும் பொருட்கள்:
1.எலுமிச்சம் பழம் – ஒன்று
2.கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
3.சோடா உப்பு – ஒரு தேக்கரண்டி
4.பூண்டு பல் – நான்கு
5.ஆரஞ்சு பழத் தோல் – ஒன்று
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு எலுமிச்சை தோலை மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து நான்கு பல் உலர்ந்த பூண்டு பற்களை அதில் போட்டுக் கொள்ளவும்.பின்னர் கல் உப்பு ஒரு தேக்கரண்டி,சோடா உப்பு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு ஆரஞ்சு பழத் தோலை அதில் போட்டு முதலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதில் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஒரு டப்பாவிற்கு மாற்றிக் கொள்ளவும்.
இந்த பேஸ்டை பிரஸில் பற்களை தேய்த்து துலக்கி வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கி சில தினங்களில் பற்கள் வெண்மையாகிவிடும்.தினமும் கல் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் மஞ்சள் கறை ஏற்படாமல் இருக்கும்.
நீங்கள் பல் துலக்கும் பேஸ்ட்டில் உப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.உணவு உட்கொண்ட பிறகு பூண்டை வைத்து பற்களை தேய்த்து சுத்தம் செய்தால் கறைகள் நீங்கிவிடும்.