நமது இந்திய உணவுகளில் பய்னபடுத்தப்படும் மசலாப் பொருட்களில் ஒன்று தான் ஜாதிக்காய்.கால்சியம்,மெக்னீசியம்,நார்ச்சத்து,தாமிரம்,மாங்கனீசு,இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் ஜாதிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் கஷ்டப்படும் நபர்கள் ஜாதிக்காயை பசும் பாலில் கலந்து பருகலாம்.இந்த ஜாதிக்காய் பால் செய்வது குறித்து இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
1)ஜாதிக்காய் – 10
2)பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் 10 ஜாதிக்காய் வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு ஜாதிக்காயை உடைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இதை டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
பால் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.அதன் பிறகு பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி அரைத்த ஜாதிக்காய் பொடி கால் ஸ்பூன் அளவிற்கு கொட்டி நன்றாக கலந்து பருகுங்கள்.விருப்பப்பட்டால் பாலில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஜாதிக்காய் பாலை இரவு நேரத்தில் பருகி வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும்.
இரவு உணவு சீக்கிரம் செரிமானமாக ஜாதிக்காய் பால் செய்து பருகலாம்.இதய ஆரோக்கியம் மேம்பட ஜாதிக்காய் பால் செய்து பருகலாம்.ஜாதிக்காய் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துஆரோக்கியமாக வாழலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஜாதிக்காய் பால் பருகலாம்.